Skip to main content

"ஜெ" பிரதமரானால்...!!

ஆனாலும் இந்த "சோ" மா(தி)ரி பேச யாருக்கும் வராது... ஒரு விழா அதில் மாங்காய்களை தனக்குத் தோதான முறையில் அடித்துக்கொள்ளப் பார்த்திருக்கிறார்....

முதலில் , பாரதிய ஜனதா கட்சியில் பிரதமர் வேட்பாளராக இருக்கும் இரு போட்டியாளர்களை கூப்பிட்டு வைத்தார். தனக்கு "மோடி" தான் பிரதமர் சாய்ஸ் என்று சொல்லுவதற்கு வாஜ்பாயையும் துணைக்கு அழைத்தார்.......வாஜ்பாயை முன்மொழிந்ததே அத்வானி தான் என்றும் , அதுபோலவே "மோடி" யையும் அத்வானி முன்மொழிய வேண்டுமென்கிறார்...

தமிழகத்தில் தனக்கான ஓட்டுவங்கியைப் பெறுக்க சில பாராளுமனற் , சட்டமன்ற தொகுதிகள் பாஜகவுக்குத் தேவை... அதனால் , அதிமுகவுடனோ , திமுகவுடனோ ஆன கூட்டணி அக்கட்சிக்கு மிகமிக அவசியம் என்பதைவிட அவசரம்...

அதனால் தான் , வாஜ்பாயை பதிமூன்று மாதங்கள் படுத்திய 'ஜெ'வுடன் கூட்டணிக்குத் தவிக்கிறார்கள் அத்வானியும் , மோடியும் , சோவும்.....எப்படி இழுப்பது? ஏற்கெனவே விஜயகாந்த்தை தேவையில்லாமல் தூக்கி விட்டுவிட்டோமோ என்ற கடுப்பில் இருக்கும் அம்மா "பாஜகவை தலையில் தூக்கி சுமக்க ஒத்துக்கொள்வாரா? அதுவும் " அம்மா" தான் எல்லாமே என்ற அபார நம்பிக்கையில் மக்கள் இருக்கும் போது? 

மாட்டார்தானே? 

அங்குதான் "சோ" மா(தி)ரி ஆட்களின் தில்லாலங்கடித்தனம் தெரிகிறது....


பாஜக ஆட்சிக்கு வருவதற்கு புரட்சித் தலைவி அவர்களின் ஆசியும் தேவை என்பதில் சோ வும் பாஜகவும் தெளிவாக இருக்கிறார்கள்....

"சும்மா வருவாளா சுகுமாரி" என்ற முதுமொழிக்கு ஏற்ப , "ஜெ" வுக்கு பிரதமர் பதவி என்ற தூண்டிலைப் போட்டு அதிமுகவை பாஜக பக்கம் இழுக்கப் பார்க்கிறார் "சோ" , கடந்த 2001 பாராளுமன்றத் தேர்தலில் "அதிமுக" பாஜகவையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு சில பாராளுமனறத் தொகுதிகளில் போட்டியிட்டிருக்காவிட்டால் இன்றைக்கும் தமிழக மக்கள் பாரதிய ஜனதா என்றால் எந்தக்கடையில் கிடைக்கும் பலகாரம் என்றே கேட்டிருப்பார்கள்....

தனது கட்சியின் " அத்வானி" பிரதமராவதை விரும்பாத மோடியோ , மோடி பிரதமராவதை விரும்பாத அத்வானியோ "ஜெயலலிதா" பிரதமராவதை விரும்புவார்களா என்ன? அத்தனையும் நாடகம்....இதை "ஜெ" நம்புவாரா? நம்புகிறார் என்பதைத்தான் அவரது சமீபத்திய தேசிய அரசியல் பற்றிய பேச்சுக்கள் காட்டுகின்றன.....

ஆக , சற்றேறக்குறைய "ஜெ" - பாஜக கூட்டு முடிவாகி விட்டதென்றே சொல்லலாம்...

ஒரு வேளை " ஜெ " பிரதமாரானால்? 

இப்போதைக்கு தமிழ்நாட்டு அறிவுஜீவிகள் ( சோ மா(தி)ரி சூப்பர் டூப்பர் அறிவுஜீவிகள் தவிர்த்து) மட்டுமே சிரிக்கும் ஆட்சியின் லட்சணம் அகில இந்தியாவுக்கும் தெரியுமோ?

"அத்வானி" எந்தத் துறைக்கு அமைச்சராவார்?  முதல் மாசமா ரெண்டாவது மாசமா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது....

நல்லவேளை இந்த முறை ஜனாதிபதியாக பிரதிபா பாட்டில் தான் இருக்கிறார்....அடுத்த முறை ஒருவேளை ஆண் ஜனாதிபதி வந்தால்????

நினைக்கவே பயமாய் இருக்கிறது.....ஒரு வேளை அவர் அடுத்த "சென்னா ரெட்டியாக" கூட இருக்கலாம்....

திமுக உறுப்பினர்களும் இருப்பதால் , பாராளுமன்றம் சரியில்லையென்று செங்கோட்டைக்கு மாற்றுவது நடக்கும் வாய்ப்பிருக்கிறது.......அகில உலகத்திலும் அதி சிறந்த மருத்துவமனையொன்று அங்கே கட்டப்படுவதற்கான பிரகாசமான வாய்ப்புத் தெரிகிறது....

தலைநகர் டெல்லியில் இருக்கும் ரவுடிகளும் , திருடர்களும் பாகிஸ்தானுக்கு ஓடிப்போவது நடந்தாலும் நடக்கும்....பாகிஸ்தான் அரசு இந்தியா ரவுடிகளை தம் நாட்டின் மீது ஏவி விடுகிறது என்று ஐ.நாவின் புகாரளிப்பதான கனவொன்று வருகிறது...

டெல்லியில் இருக்கும் நூலகங்களனைத்தும் குழந்தைகள் நல மருத்துவமனையாக வாய்ப்பிருக்கிறது.....

மாநில கவர்னர்கள் மாதமொருமுறை மாற்றப்படும் வாய்ப்பு அதிகம்....

மத்திய அமைச்சர்கள் மாற்றுத் துறை என்றொரு புது அமைச்சகம் செயல்பட வாய்ப்பதிகம்...அத்துறை பதினைந்து நாளுக்கொருமுறை புது அமைச்சர் செயல்படுவார் என்ற கொசுரு அறிவிப்பை நீங்கள் கணக்கிலெடுக்கக்கூடாது..

அதிகாரிகள் நலத்துறை இனிமேல் அதிகாரிகள் மாற்றுத்துறை என்ற பெயரில் செயல்படும் என்ற அறிவிப்பு வந்தாலும் வரலாம்.

டெல்லியில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட அதிகாரி தனது பணி மாற்ற உத்தரவையடுத்து சென்னைக்கு ரயிலில் செல்லக்கூடாது என்ற உத்தரவு வரலாம்....ஏனென்றால் , சென்னையிலிருந்து மதுரைக்கு மாற்றப்பட்ட அதிகாரி மதுரை சென்று சேருமுன் சேலத்துக்கு மாற்றப்பட்ட நிலை இந்திய அளவில் வரக்கூடாது என்ற முன்யோசனையாக இருக்கலாம்.....

ராம்தேவாவது , ஹசாரே வாவது அத்துணை பேரையும் நில அபகரிப்புச் சட்டத்தில் தூக்கி உள்ளே போடுங்க என்ற உத்தரவு வரலாம்....மன்மோகன் சிங் அவர்களைக் கூட அச்சடடத்திலேயே கைது பண்ணலாம்....!!!

கொஞ்சம் குண்டா இருக்கிறார் என்பதற்காக சரத் பவாரை குண்டர் சட்டத்தில் கைது பண்ணச் சொல்லலாம்......

என்.டி.டி.வி அலுவலகம் " அம்மாவைச் சும்மா என்று சொன்ன குற்றத்திற்காக ஆண்டுக்கணக்கில் முறை வைத்து அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபடலாம்..

பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் , திடீர் திருப்பமாக பேராசிரியர் அன்பழகன் அவர்கள் " பிரதமர் " ஜெ கட்டுப்பாட்டில் இருக்கும் நீதித்துறையால் நியாயம் கிடைக்காது " அதனால் சர்வதேச கோர்ட் தான் விசாரணை செய்யவேண்டும் என்று முறையிடலாம்....!!!

இந்தியா முழுக்க கவர்ன்மெண்ட்டே டாஸ்மாக் நடத்தும் , அத்துணை சரக்குகளையும் "மிடாஸ்' ஆலையிலிருந்து தான் கொள்முதல் செய்யவேண்டும் என்று ஒரு வாய்மொழி உத்தரவு வரலாம்...!!

முத்தாய்ப்பாக சம்மரில் டெல்லி சூடு அதிகமாக இருக்கிற நேரத்தில் தலைநகரை " கொடநாட்டுக்கு" மாற்றி விடுவதாக அறிவிப்பு வந்தாலும் வரலாம்...

"துக்ளக்" சோ மாதிரி ஆட்களின் ஆலோசனையில் நடக்கும் ஆட்சியில் "துக்ளக்" நடவடிக்கைகள் இல்லாமல் இருந்தால் தானே ஆச்சரியம்...

Comments

Robin said…
சோ அவங்க ஆளு பிரதமர் ஆகணும்னு ஆசைப்படுகிறார் :)
Anonymous said…
Hahahaha


I can't stop the laugh when I'm Reading It.
TBR. JOSPEH said…
சோ ஒரு பிறவி நகைச்சுவை நடிகர். ஆகவே அவர் கூறியதை படித்துவிட்டு வாய் விட்டு சிரித்துவிட்டு போய்விட வேண்டும்.
ஆக சோமாரி,கேப்மாரியெல்லாம் ஒன்னா
சேர்நது ஏமாளிகளுக்கு மூனு பட்டை நாமம் போட முடிவாயிருச்சு? ம்..ம்
மதிபாலா said…
Robin said...
சோ அவங்க ஆளு பிரதமர் ஆகணும்னு ஆசைப்படுகிறார் ://

வாங்க மிஸ்டர் ராபின்......எப்படி இருக்கீங்க?

எப்பவுமே , அவுங்க ஆளுங்கதானே எல்லாப்பதவியிலயும் இருக்காங்க...
மதிபாலா said…
Anonymous said...
Hahahaha


I can't stop the laugh when I'm Reading It.//

ஹஹஹ....அம்மா பிரதமரானால் உலகமே சிரிக்கும்!... அதுனால நல்லா சிரிச்சி வையிங்க பாஸ்
மதிபாலா said…
Tbr Joseph said...
சோ ஒரு பிறவி நகைச்சுவை நடிகர். ஆகவே அவர் கூறியதை படித்துவிட்டு வாய் விட்டு சிரித்துவிட்டு போய்விட வேண்டும்./

அதெப்படி வுடுறது தல?
அவர் நம்ம , உங்க , எங்க எல்லார் வாழ்க்கையிலயும் அல்லவா வெளையாடுறார்?
மதிபாலா said…
வலிபோக்கன் said...
ஆக சோமாரி,கேப்மாரியெல்லாம் ஒன்னா
சேர்நது ஏமாளிகளுக்கு மூனு பட்டை நாமம் போட முடிவாயிருச்சு? ம்..ம்

January 17, 2012 2:32 AM//

இனிமேல புதுசா போடணுமா என்ன தலைவரே? அதான் எப்பவுமே போடுறாங்களே...!
மதிபாலா said…
வலிபோக்கன் said...
ஆக சோமாரி,கேப்மாரியெல்லாம் ஒன்னா
சேர்நது ஏமாளிகளுக்கு மூனு பட்டை நாமம் போட முடிவாயிருச்சு? ம்..ம்

January 17, 2012 2:32 AM//

இனிமேல புதுசா போடணுமா என்ன தலைவரே? அதான் எப்பவுமே போடுறாங்களே...!
Vijay Periasamy said…
ரொம்ப அருமை !
நல்ல நகைச்சுவையான கற்பனை !

இணையத் தமிழன்,
http://inaya-tamilan.blogspot.com
Nandri Thiru Vijay Periyasamy

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்கும...

செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்! த ற்செய லாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..! அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!) பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்ச...