தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. வருங்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு கடும் சவால்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். நீங்கள் சரியாக பாடுபட்டால் உங்களில் ஒருவர் (இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்) தமிழக முதலமைச்சராக வாய்ப்பு இருக்கிறது. ராகுல் காந்தி சரியாத்தான் சொல்லி இருக்காரு...எப்படிக்கஷ்டப்பட்டாலும் இன்னும் இருவது முப்பது வருஷத்துக்கு காங்கிரஸ் ஆட்சி தமிழ்நாட்டுல அமைய வாய்ப்புக்கிடைக்காது...அதனால , முதியோர் காங்கிரஸ் காரங்க யாரும் முதல்வர் ஆக முடியாதே....இளைஞர் காங்கிரஸ் காரங்க தான் ஆக வாய்ப்புண்டு.......ராகுலின் தொலைநோக்குப் பார்வை புல்லரிக்க வைக்கிறது!! பொதுஜனம் சென்னை: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய உதவிகளை செய்யாதது கவலையளிப்பதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார். சபாஷ்...இதைவிடக் காமெடி இதுகாறும் நடந்ததொன்றும் கிடையாது...பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் கலை காங்கிரசுகாரர்களுக்குப் புதிதா என்ன? இறுதி யுத்தம் ...